18 மாவட்டங்களில் இன்று கனமழை: எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:03 IST)
தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 18 மாவட்டங்களில் கனமழையும், புதுச்சேரியில் சில இடங்களில் கமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனம்ழை கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்