16வது சட்டசபையின் முதல் கூட்டம்: பெரும் எதிர்பார்ப்புடன் இன்று கூடுகிறது!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:46 IST)
தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைச்சரவை அமைந்த பிறகு புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பதற்காக சபாநாயகரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அதன் பிறகு புதிய அரசின் முதல் பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடைவெளியில் பேரவை உறுப்பினர்களை அமர வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 16வது கூட்டத் தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நெகட்டிவ் முடிவுகள் வந்தவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக ஆளூனர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் 16வது சட்டசபையை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதன்பின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் இன்றும் இதில் எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்