அரியலூரில் மேலும் 160 பேர் குணமாகி வீடு திரும்பல் !

Webdunia
வியாழன், 14 மே 2020 (07:55 IST)
அரியலூர் மாவட்டத்தில் மளமளவென கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கும் நிலையில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில் 4 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அரியலூர் வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிட்டதட்ட 2500 பேருக்கும் மேல் அரியலூரில் இருந்து கோயம்பேடு மாவட்டத்தில் வேலைப் பார்ப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரியலூருக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொரோன சோதனை மேற்கொள்ளப்படுகின்றனர்.

இதுவரை கொரோனாவால் 350 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 160 பேர் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதற்கான சான்று மற்றும் பழங்களை அவர்களுக்கு அரசு அதிகாரிகள் வழங்கினர். மேலும் அவர்களை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்