1450 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: தென்மண்டல ஐஜி தகவல்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (20:56 IST)
1450 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: தென்மண்டல ஐஜி தகவல்
1450 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தென்மண்டல ஐஜி தகவல் தெரிவித்துள்ளார். 
 
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
 
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 31 வீடுகள் 10 வீட்டு மனைகள் ஐந்து கடைகள் மற்றும் வாகனங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
 
கடந்த 10 மாதங்களில் மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக ரூபாய் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தென்மண்டல ஐஜி தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்