தேனியில் திருமணம் தடையானதால் தனது அக்காள் மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார் மணமகன் ஒருவர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பாண்டி என்பவருக்கு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் வேறொருவரை காதலித்ததால் திருமணம் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியான மணமகன் குடும்பத்தினர் திருச்சியில் இருக்கும் அருள்பாண்டியின் அக்கா மகளான 13 வயது சிறுமியை அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தேனிக்குஅழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.