அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை - எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:19 IST)
12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
 
இதனைத்தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்