தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னையில் கடந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மழை பெய்தால் சென்னை குளிர்ச்சியானது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் மீண்டும் மழை பெய்ததை அடுத்து சென்னை மக்கள் குளிர்ச்சியை அனுபவித்தனர். சென்னையின் பல இடங்களில் நேற்று மழை பெய்தது.
மேலும் இன்று கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.