நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
ஒரு இடத்தில் கூட முன்னிலை பெற முடியாத நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ள நிலையில், மக்கள் தீர்ப்பே மகேசன் தீரப்பு என்று முடிவை ஏற்றுக் கொள்கிறோம் என்று தேர்தல் முடிவுகள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும், இந்திய அளவில் பாஜக கூட்டணி 335 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தவிர, பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி, வதோதரா தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.