வேதியியல் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரிப்பு: 6 மாணவர்கள் கைது

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (19:08 IST)
வேதியியல் படிக்கும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன்  என்ற போதைப் பொருளை தயாரித்த ஆறு மாணவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைப்பொருள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் போதைப் பொருளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில், சென்னையை  சேர்ந்த ஆறு கல்லூரி மாணவர்கள், வீட்டிலேயே ஆய்வகம் உருவாக்கி, அதில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை தயாரித்ததாக தெரிகிறது. இந்த தயாரிப்புக்கு வேதியியல் படிக்கும் மாணவர் ஒருவர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 
வெளியே வாங்கிய போதைப் பொருள் தரம் இல்லாததால், சவுகார்பேட்டையில் வேதிப்பொருள்கள் வாங்கி, வேதியியல் படித்து வரும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன்  தயாரித்து விற்பனை செய்து வந்ததாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து ஆறு மாணவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வீட்டிலேயே போதைப் பொருள் தயாரிப்பது மாணவர்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்