சென்னையில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள்.. ஒரு ரயில் தயாரிக்க ₹120 கோடி..!

Mahendran

புதன், 23 அக்டோபர் 2024 (19:02 IST)
வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும், இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
 
தற்போது வந்தே பாரத் ரயில்கள் சிட்டிங் வசதி கொண்டதாக உள்ள நிலையில், விரைவில் ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த ரயில்கள் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில், ஒரே நேரத்தில் 823 பயணிகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இந்த ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. 
 
16 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் தயாரிக்க 120 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக ICF பொது மேலாளர் சுப்பா ராவ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்