மன அழுத்தத்துக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (21:04 IST)
மன அழுத்தத்தில் இருந்து விடைபெற சிறந்த மருந்து தினமும் உடற்பயிற்சி செய்வது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
விரக்தியாகப் பேசுதல், அளவுக்கு மீறிய கோபம், இனம் புரியாத கவலை, தூக்கமில்லாமல் இருப்பது, பசியின்மை, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, இனம் புரியாத பயம், தனிமையில் அழுவது, தேவையின்றி பதற்றமடைவது, காரணமே இல்லாமல் எப்போதும் சோகமாக இருப்பது, அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவது ஆகிய அனைத்துமே மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
முக்கியமாக மன அழுத்தம் உள்ளவர்கள், தனிமையைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
 
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்