கைப்பேசியில் செல்பி புகைப்படம் எடுக்கும் மோகத்தைப் போக்க இங்கிலாந்து நாட்டில் மிண்ட்ஸ் என்ற பெயரில் ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைப்பேசியில் உள்ள கேமராக்களில் செல்பி புகைப்படம் எடுக்கும் பழக்கம் இந்தியா மட்டுமின்றி உலக அளிவில் நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து வருகிறது. தற்போது கைப்பேசியில் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியும் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் எதிர்வினைகளும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
சிறப்பான செல்பி புகைப்படம் எடுப்பதற்காக கட்டிடங்களின் உயரங்களில் நின்று எடுக்க முயலும் போது சிலர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தண்ணீர்க்குள் மூழ்கிய படி செல்பி எடுக்கும்போது பலியாகியுள்ளனர். உலகின் பல்வேறு இடங்களில் விசித்திரமான முயற்சியில் ஈடுபட்டு பலர், இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும், செல்பி புகைப்படம் எடுக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த பழக்கத்தை தடுக்க முதல் முதலாக, இங்கிலாந்து நாட்டில் மிண்ட்ஸ் என்ற ஆன்டி-செல்பி மாத்திரைகள் விற்பணைக்கு வந்துள்ளது.
இந்த மாத்திரையின் விலை இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. மாத்திரையின் விலை அதிகமாக இருந்தாலும் செல்பி நோயாளிகள், இந்த மாத்திரை தங்களை குணப்படுத்தும் என்கிற நம்பிகையில் உட்கொண்டால் தங்களது பிரச்சனையிலிருந்து உடனடியாக மீள்வார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.