நமது நாகரீகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், மனிதன் காதல் விஷயத்தில் யதார்த்ததை தாண்டி அவனால் ஒரு அடிகூட எடுத்துவைக்கமுடியவில்லை. காரணம், காதல் என்பது, வெறும் உடல் , அழகு மட்டும் அல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்டது. மனம் சம்பந்தப்பட்டது. அதனால் தான் காதல் பல வருடங்கள் ஆனாலும் அழியாமல் அப்படியே வாழ்கிறது.
இதில், ஆண்களைவிட பெண்களின் காதல் தான் ரொம்பவே சோகம், அந்த பெண்களின் காதல் குறித்து, கவிஞர் மிகவும் யாதார்த்தை பரவச் செய்துள்ளார். அவரது வரிகளில் விளையாடும் தமிழும், காதல் மொழியும், உணர்வும் மிக அற்புதம். அதை நாமும் கேட்டு ரசிப்போம். இதோ அந்த கவிதை மொழி...!
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்
* உங்களுடைய நேரம்
* உங்கள் புன்னகை
* உங்கள் நேர்மை
* உங்கள் புரிதல்
மற்றும் உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்என்பதைத்தான்