✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எழுந்து வா எங்கள் தலைவா!
Webdunia
சனி, 28 ஜூலை 2018 (13:17 IST)
உன் மடி; உன் விழி ;
உன் தோள் ; உன் மொழி ;
உன் நினைவு ; உன் சுவாசம் என
உன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்கள்
வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறார்கள்
எழுந்து வா எங்கள் தலைவா !
உன் விரலுக்கும், தமிழுக்கும் என்ன சண்டையா ?
தாளா முடியாதத் தவிப்பில் உன் செம்மொழி
எழுந்து வா எங்கள் தலைவா !
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
அந்த பாதையில் மரணம் இல்லை
எழுந்து வா எங்கள் தலைவா !
நீ படிக்காதவன் தான் என் தகப்பன்னைப் போல !
என்னை படிக்க வைத்தவன் !
எனக்குப் பிறகு என் குடும்பம் மொத்தமும் பட்டதாரிகள் !
என் சகோதரிகளின் பெண் பிள்ளைகளை
படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறாய் !
பட்டம் பெற அழைக்கிறோம்
எழுந்து வா எங்கள் தலைவா !
நீ தூசி அல்ல ! பறந்துப் போவதற்கு
நீ துகள் அல்ல ! துவண்டுப் போவதற்கு
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத
எப்போதும் பிரகாசிக்கும் ஆதவன் நீ !
எழுந்து வா எங்கள் தலைவா !
சமூக நீதிக்கான உன் பாதையில் தான்
எத்தனை கரு நாகங்கள் !
பேய்களுடனும் பிசாசுகளுடனும் நீ களம் ஆடிய போர்களம் அது !
உன் சமத்துவபுரங்கள் அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
தெள்ளுத்தமிழில் கவிப்பாட !
உன் துள்ளுத்தமிழ் உரை கேட்க !
உன் தொல்காப்பியர் பூங்கா அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
நீ நாத்திகன் தான் !
மண் சோறும் இல்லை
பால் குடங்கள் இல்லை
தீ சட்டிகள் இல்லை
தீ மிதித்தல் இல்லை
திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிய தேர் அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
கடை மடைத் தொட்ட காவேரியைக் காண !
நீ பிறந்த மண் திருக்குவளைக் காண !
செந்தமிழே !
செம்மொழியே !
சாயாத புகழே !
சிங்க குரலே !
அண்ணாவின் இதயமே !
திராவிட நூலகமே !
எழுந்து வா எங்கள் தலைவா !
இரா. காஜா பந்தா நவாஸ்
sumai244@gmail.com
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கருணாநிதி உடல்நிலை குறித்த செய்தி கேட்டு திமுக தொண்டர் மாரடைப்பால் மரணம்
விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்
கருணாநிதிக்கு ஏன் வீட்டிலேயே சிகிச்சை? - வெளியான தகவல்
கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை : உண்மை நிலவரம் என்ன?
பொன் விழா தலைவர் கலைஞர் : ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!
பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!
எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!
ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?
அடுத்த கட்டுரையில்
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்...!