சிம்பிளான ஆனா சுவையான முட்டை தொக்கு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
முட்டை - 4 (வேக வைத்தது)
வெங்காயம் - 2 (பெரியது & பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 
வறுத்து அரைப்பதற்கு:
 
எண்ணெய் -1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
தனியா (மல்லி) - 1 டீஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
 
அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பேனை வைத்து, அதில் முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2 நிமிடம் முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை தொக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்