* முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும். தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
* பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும். சுவை மிகுந்த முட்டை மசாலா தயார்.