கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை போட்டு வதக்கவும்.
மிளகு, சீரகம், சோம்பு மஞ்சள் தூளுடன் அரைத்து, இதனுடன் பூண்டு, சிறிது இஞ்சி, பாதி வெங்காயம் சேர்த்து அரைக்கவும். வதங்கியவற்றுடன் கோழியையும் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும். தேங்காயுடன் 4 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். குழம்பு கொதித்து கோழி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான் கோழிக் குழம்பு தயார்.