சுவையான முறையில் நண்டு தொக்கு செய்வது எப்படி...?

திங்கள், 6 ஜூன் 2022 (14:01 IST)
தேவையான பொருட்கள்:

கடல் நண்டு - கால் கிலோ (சுத்தம் செய்யப்பட்டது)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
கடலை எண்ணெய் - 1 குழிக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் (தனியா) - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப



செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய்யை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும். பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும். இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள். இப்போது உப்புச் சேர்த்து, சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.

நண்டில் இருந்து வெளிப்படும் நீரும், நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடுங்கள். சுவையான நண்டு தொக்கு தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்