சுவையான சத்தான நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி...?

செவ்வாய், 31 மே 2022 (17:01 IST)
தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 3
துருவிய தேங்காய் - 1 கப்
சிவப்பு மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
உளுந்து - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 1 தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்:

எள் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 மேஜைக்கரண்டி



செய்முறை:

நெல்லிக்காய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி உளுந்து, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, நெல்லிக்காய் போட்டு நன்றாக வதக்கிய பின் துருவிய தேங்காயை போட்டு வதக்கவும். வறுத்தவற்றை ஆறவைத்து மிக்சியில் போட்டு அதனுடம் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில்ல வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த நெல்லிக்காய் சட்னியில் போட்டு பரிமாறவும். சுவையான சத்தான நெல்லிக்காய் சட்னி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்