செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேங்காய், வரமிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும். அரைத்து வைத்த மசாலைவை சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும். கடைசியில் மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான இறால் சுக்கா தயார்.