வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ கேக் செய்ய !!

வெள்ளி, 3 ஜூன் 2022 (15:26 IST)
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
மாம்பழம் - பாதி
பால் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 4 துளிகள்
பட்டர் -1 கப்
வால்நட் - சிறிது
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி



செய்முறை:

முதலில் பட்டரை நன்கு உருக்கிக் கொள்ளவும். அதன் பின்னர் அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

பின் மாம்பழத்தை தோல் உரித்து, ஒன்றுக்கு இரண்டாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கோதுமை கலவையில் மாம்பழ கூழ், பால், வெனிலா எசன்ஸ் மற்றும் பட்டரை ஊற்றவும். சிறிது மாம்பழக் கூழை தனியே எடுத்து வைக்கவும். அனைத்து கலவையையும் பீட்டரில் மென்மையாக நன்கு கலக்கவும்.

பின் ஒரு மைக்ரோ ஓவன் ட்ரேயில் 60% மேல் இருக்காதவாறு கலவையை ஊற்றவும். அப்போது தான் கேக் நன்கு வெந்து உப்பி வர தேவையான இடம் கிடைக்கும். ஓவனை 325 சூடுக்கு முதலில் சூடு செய்து டிரேயை 45 நிமிடம் வரை வைக்கவும். அவ்வப்போது திறந்து பார்த்து நிறத்தை சோதனை செய்து கொள்ளவும்.

கேக் நன்கு பிரவுன் கலரில் மாறியதும் அதை திருப்பி போட்டு 5 நிமிடம் ஆற விடவும். பின் மீதமுள்ள மாம்பழக் கூழை கேக்கின் மீது தடவி வேண்டிய டிசைனை செய்து கொள்ளவும். சுவையான மாம்பழ கேக் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்