தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடித்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
முதலில் ஆட்டுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும். நன்கு சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும் வரை வேக விடவும்.
எண்ணெய்யை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிதளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதிகம் குழைய தேவையில்லை. அதனால் சிறிதளவு வெந்ததும் வேகவைத்துள்ள ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.
பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.