ஏழை எளிய மக்களுக்கு அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த 6 மாதங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. விலை கொடுத்து வாங்க முடியாமல் சராசரி வருவாய் உள்ள குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.
காய்கறி, பழங்கள், எண்ணெய், மளிகைப் பொருட்கள், பாலுணவுகள் என்று அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. அத்யாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த 6 மாதங்கிளில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்.வெப்துனியா.காம் நேரடி விவர சேகரிப்பில் ஈடுபட்டது. பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
webdunia photo
WD
காய்கறிகள் விளைச்சல் தமிழகத்தை விட அதிகமுள்ள கர்நாடகாவில் இருந்துதான் அதிக அளவிற்குத் தமிழகத்திற்கு வருகிறது (ஒகேனக்கல் பிரச்சனை ஏற்பட்டபோது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலே காய்கறிகள் வந்தது, இதனால் இதன் விலை அதிக அளவு உயர்ந்தது). இப்படி சில சிக்கல்களால் விலையேற்றம் அவ்வப்போது ஏற்பட்டாலும், நிலைமை சீரடைந்ததும் விலைகள் குறைந்துவிடும். ஆனால், ஏறிய விலை (சில பொருட்களைத் தவிர) இறங்கவேயில்லை என்பது நமது நேரடி ஆய்வில் தெரிந்தது.
எண்ணெய் விலையை பொறுத்தவரை கடந்த 6 மாதங்களில் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரளவிற்கே விலை குறைந்துள்ளது என்றாலும், நல்லெண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 6 மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.70 க்கு விற்ற நல்லெண்ணெய், திடீரென ரூ.70 உயர்ந்து ரூ.140 ஆக உயர்ந்தது. தற்போது ரூ.115க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு காரணம் ஆன் லைன் வர்த்தகமே. இதனை தடை செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் என்று வியாபாரி ஜெகந்நாதன் கூறினார்.
கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை கண்டறிய தமிழ்.வெப்துனியா.காம் சந்தைக்குச் சென்று நேரடியாக விவரங்களைச் சேகரித்தது.
கிழ்கண்ட விலைகள் மொத்த, சில்லறை வியாபாரிகளிடம் நேரடியாக கேட்டு பெறப்பட்டதாகும்.
முதலில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பார்ப்போம்! விலை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் 6 மாதத்திற்கு முந்தைய விலை)
சாத்துக்குடி ரூ.26 (20) ஸ்ட்ராபெர்ரி ரூ.35 (140) (4 நாட்களுக்கு முன் ரூ.160க்கு விற்றுள்ளது)
webdunia photo
FILE
கொய்யா ரூ.22 (18) கருப்பு திராட்சை ரூ.20 (40)
பச்சை திராட்சை ரூ.40 (46)
கணேஷ் மாதுளை ரூ.35 (45)
காபூல் மாதுளை ரூ.55 (65)
செவ்வாழைப் பழம் ரூ.24 (34)
கற்பூரவள்ளி ரூ.13 (15)
ரஸ்தாளி ரூ.17 (22)
பச்சை வாழைப் பழம் ரூ.12 (10)
பப்பாளி ரூ.10 (08)
சப்போட்டா ரூ.20 (30)
கிரினி பழம் ரூ.11 (15)
தர்பூசணி ரூ.04 (12)
நேந்திரம் பழம் ரூ.18 (20)
பகனப்பள்ளி மாம்பழம் ரூ.35 (45)
செந்துரா மாம்பழம் ரூ.20 (30)
அப்போன்சா மாம்பழம் ரூ.40 (65)
அத்திப்பழம் ரூ.03 (07)
மேற்கண்ட விலைகள் அனைத்தும் சென்னை கோயம்பேடு சில்லரை அங்காடி விலைகளாகும். ஆனால் சென்னையில் உள்ள மற்ற அங்காடிகளில் இந்த விலைக்குக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு தக்காளி விலை மற்ற அங்காடிகளில் ரூ.20க்கு குறைந்து கிடைக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக அத்யாவசியப் பொருட்களின் விலை கடந்த 6 மாதங்ககளில் கடுமையாக உயர்ந்துள்ளது கண்கூடு