பங்குச் சந்தை 156 புள்ளிகள் உயர்வு!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (20:11 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 156 புள்ளிகள் அதிகரித்து. 18,814 புள்ளிகளாக உயர்ந்து. சென்செக்ஸ் 19,000 புள்ளிகளாக உயர இன்னும் 186 புள்ளிகளே உள்ளன. நாளை பங்கு விலைகள் அதிகரித்தால் குறியீட்டு எண் 19,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்று புரோக்கர்கள் கூறுகின்றனர்.

திங்கட்கிழமையன்று குறியீட்டு எண் 18,000 புள்ளியைத் தாண்டியது. நாளை 19,000 புள்ளியை தாண்டினால் ஐந்தே நாட்களில் 1000 புள்ளிகள் அதிகரிப்பது சாதனையாக கருதப்படும்.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 83.40 புள்ளிகள் அதிகரித்தது. நிஃப்டி குறியீட்டு எண் 5,524.85 புள்ளிகளாக முடிவடைந்தது
இன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது.

லார்சன் அண்ட் டூப்ரோ, கிரேசம் இன்டஸ்டிரிஸ், ஏ.சி.சி, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், ஹெச்.டி.ஃப்.சி ஆகியவைகளின் பங்கு விலை அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்