அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது, பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எறிந்தது. இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த விமான கேப்டன், உடனடியாக பயணிகள் அனைவரையும் வெளியேற்றி, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் வழங்கினார். அவர் துரிதமாக செயல்பட்டதின் விளைவாக, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, பயணிகளுக்காக மாற்று விமானம் மூலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தில் இருந்த 172 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களும் எந்தவிதமான ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.