தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், நேற்று திடீரென இந்திய அரசால் வெளியிடப்பட்ட "₹" என்ற சின்னத்திற்கு பதிலாக "ரூ" என மாற்றி பயன்படுத்தப்பட இருப்பதாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசும் போது, "தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ சின்னமான ₹ என்பதை நீக்கி 'ரூ' என திமுக அறிவித்துள்ளது. திமுகவுக்கு உண்மையில் இந்த சின்னத்தில் பிரச்சினை என்றால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த சின்னத்தை அறிவிக்கும் போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.