நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில்களின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலர்!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:39 IST)
இந்தியாவின் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில்கள் சென்ற நிதியாண்டில் (2006-07) 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளன. இது மொத்த ஏற்றுமதியில் 40 விழுக்காடாகும்!

இந்தப் பிரிவுகளில் இந்தியாவில் 1 கோடியே 25 இலட்சம் தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் 3 கோடி பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இத்துடன் நாட்டின் மொத்த உற்பத்தியில் இந்த பிரிவு தொழிற்சாலைகளின் பங்கு 50 விழுக்காடாக இருக்கின்றது.

இவைகளின் முக்கிய ஏற்றுமதி ஆயத்த ஆடை, இராசயணப் பொருட்கள், மருந்து வகைகள். இயந்திரங்கள், இயந்திர உதிரி பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களாகும்.

சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி, மற்ற பிரிவுகளின் வளர்ச்சியைவிட ஒன்றரை முதல் இரண்டு மடங்காக இருக்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்