நவஜீவன், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழித்தடங்கள் மாற்றம்: என்ன காரணம்?

Siva

புதன், 12 பிப்ரவரி 2025 (08:10 IST)
தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் நவஜீவன் மற்றும்  திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்ல இருப்பதாகவும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில நாட்கள் மாற்றுப்பாதையில் இந்த இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னை கோட்டத்துக்குட்பட்ட கவரைப்பேட்டை, பொன்னேரி ரயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.. இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் அகமதாபாத் செல்லும் நவஜீவன் அதிவிரைவு ரயிலும் (எண்: 12656) , பிப்.19-இல் நியூ ஜல்பைகுரி செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 22611), பிப்.21-இல் புவனேசுவரம் செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 12829) அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.. 
 
அதேபோல் பிப்.12-ஆம் தேதி கன்னியாகுமரி - நிஜாமுதீன் இடையே இயங்கும் திருக்குறள் அதிவிரைவு ரயிலும், பிப்.16-இல் மதுரை - நிஜாமுதீன் இடையே இயங்கும் சம்பாா்க் கிராந்தி அதிவிரைவு ரயிலும், பிப்.18-இல் ராமேசுவரம் - ஃபெரோஸ்பூா் இடையே இயங்கும் ஹம்சபா் அதிவிரைவு ரயிலும்  சென்னை கடற்கரை, அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.. 
 
மேலும், மதுரை - சன்டிகா் அதிவிரைவு ரயில் பிப்.12 -ஆம் தேதியும், கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் பிப்.18-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மேல்பாக்கம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் திருத்தணியில் நின்றுசெல்லும். . 
 
விஜயவாடாவிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு வரும் பினாகினி அதிவிரைவு ரயில் கூடூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் அதேநாள்களில் கூடூரிலிருந்து புறப்பட்டு விஜயவாடா சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்