புனேவில் வேகமாக பரவும் ஜிபிஎஸ் நோய்.. பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு..!

Siva

புதன், 12 பிப்ரவரி 2025 (08:02 IST)
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் ஜிபிஎஸ் என்ற நோய் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கிலன் பா சிண்ட்ரோம் என்ற பாதிப்புக்கு ஜிபிஎஸ் என்று கூறப்படும் நிலையில், இந்த நோயால் இதுவரை 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே உட்பட சில பகுதிகளில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் 48 பேர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று, டிரைவர் ஒருவருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகவும், இதுவரை மொத்தம் ஏழு பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், புனே நகரில் ஜிபிஎஸ் நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்