போலி வங்கி கணக்குகளை கண்டுபிடிக்க ஏஐ தொழில்நுட்பம்: அமைச்சர் அமித்ஷா

Siva

புதன், 12 பிப்ரவரி 2025 (07:55 IST)
போலியான வங்கி கணக்குகளை கண்டுபிடிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம்" என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த ஆலோசனை குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வந்தாலும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 850 மொபைல் போன் செயலிகள் மற்றும் 3206 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும், சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் 19 லட்சம் போலி வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 2038 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைந்து போலி வங்கி கணக்குகளை அடையாளம் காண ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா டிஜிட்டல் புரட்சியை செய்துள்ளதாகவும், நாட்டில் உள்ள 95% கிராமங்களுக்கும் டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்