சிமெண்ட், மூலதன இயந்திரங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பினாலும், வட்டி உயர்வை மைய வங்கி நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்ததன் காரணமாகவும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீடு 15,000 புள்ளிகளைத் தாண்டியது.
இன்று மதியம் 1.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தை புள்ளி 15,007.22 புள்ளிகளை எட்டியது.
அதே நேரத்தில் தேச பங்குச் சந்தை குறியீடு நிப்டி 4,411 புள்ளிகளை தொட்டது.
பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடு 14,954 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய வணிகத்தின் முடிவில் இருந்த நிலையைக் காட்டிலும் 94 புள்ளிகள் அதிகமாகும்.
நிப்டி 29 புள்ளிகள் அதிகரித்து 4,383 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.