எண்ணெய் நிறுவனங்களின் மானியச் சுமை அதிகரிக்கும் என்ற தகவலும், பாரத அரசு வங்கியின் காலாண்டு இலாபம் குறைந்தது என்ற செய்தியும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தை இன்று பெருமளவிற்குப் பாதித்துள்ளது.
30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் நிலையை வெளிப்படுத்தும் மும்பை சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 208 புள்ளிகள் குறைந்து 18,137 புள்ளிகளில் முடிந்தது.
தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, 60 புள்ளிகள் குறைந்து 5,438 புள்ளிகளாக சரிந்துள்ளது. ஒரு கட்டத்தில் இது 5,421 புள்ளிகளாக குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.