நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம் யாரெல்லாம் சாப்பிட கூடாது...?

Webdunia
மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது.

எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை வார்த்தால், மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும். மதிய உணவில் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இரவு உணவில் சேர்த்தால், செரிமானமாக தாமதமாகும்.
 
சூடாக சமைத்த உணவில் மட்டுமே சேர்க்க வேண்டும் அல்லது பசுநெய்யை உருக்கிய பிறகுதான் சாப்பிட வேண்டும். சூடு இல்லாத உணவுகள், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் விடக் கூடாது.
 
பாசிப்பருப்போடு சேர்ப்பதால், இதில் உள்ள அதீதக் கொழுப்பு, பருப்பின் புரதச்சத்தோடு சேர்ந்து குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் சேர வழிவகுக்கும்.
 
பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்ற அசைவ உணவுகளோடு சேர்க்கக் கூடாது. இரண்டிலும் கொழுப்பு அதிகம் என்பதால் செரிமானமாக தாமதமாகும்.
 
எந்த உணவுடன் நெய் சேர்க்கலாம்:
 
* பாசிப் பருப்பு, துவரம் பருப்புடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாம்பார் தாளிக்கப் பயன்படுத்தலாம் .
 
* சூடான அரிசி சாதத்துடன் சேர்க்கலாம். புளிக் குழம்பு, காரக் குழம்பு, கூட்டு ஆகியவற்றுடன் சேர்க்கலாம்.
 
* நட்ஸுடன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேரட் அல்வா, பீட்ரூல் அல்வா போன்ற ஹோம்மேடு இனிப்பு வகைகளில் சேர்ப்பது நல்லது.
 
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
 
செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, வாந்தி வரும் உணர்வு, கல்லீரல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னை இருப்போர் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்