தொடர்ந்து தூதுவளை மூலிகையை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் !!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:05 IST)
பாரம்பரிய மூலிகையான தூதுவளையை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.


தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது என மருத்துவ ஆவிகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன.

உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படுகின்றன. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிடுபவர்களுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

தூதுவளைக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும்.

தொடர்ந்து தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடையும். இது மூளையில் இருக்கும் செல்களை தூண்டி நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவளை இலையை நன்கு பொடியாக்கி பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை தீரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்