மருத்துவகுணம் நிறைந்த மாதுளம் பூவின் பயன்கள் என்ன...?

Webdunia
உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல ஆரோக்கியம்  உண்டாகும்.

* மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.
 
* அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்கிறது. இதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது  நல்லது. 
 
* பெண்களுக்கு கருப்பை நன்கு வருவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். 
 
* மாதுளம் பூக்களை நசுக்கி அத்துடன் இரண்டு மடங்கு நீர்விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவும். 
 
* மாதுளம் பூவை பசும்பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாது பலம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்