முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
எலுமிச்சை சாறு மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மை கூந்தலின் pH-ஐ சமப்படுத்த உதவுகிறது, இதனால் பொடுகு வளர்ச்சியைத் தடுக்கிறது.