சப்ஜா விதையினை மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:16 IST)
சப்ஜா விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர நாளடைவில் மலச்சிக்கல் நீங்கும். குடல் ஆரோக்கியம் மேம்படும்.


சப்ஜா விதைகளில் கலோரிகள் மிகக் குறைவு. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடற்பருமன் குறையும். மாதவிலக்கின்போது பெண்களுக்கு உண்டாகும் அடிவயிற்று வலி நீங்க உதவும்.

மலச்சிக்கலை போக்க உதவுகின்றன. அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. அவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.
சப்ஜா விதைகள் சிறுநீரை உண்டாக்கும்.

சப்ஜா விதைகள் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கின்றன, எனவே, அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு இது சிறந்தது.

சப்ஜா விதைகள் நீரிழிவைத் தடுக்க உதவும். ஒரு ஸ்பூன் விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

சப்ஜா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பது மட்டுமல்லாமல் ரத்தசோகையையும் தடுக்கும்.

உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், இரவில் ஊறவைத்த சப்ஜா விதைகளை மறுநாள் காலை சாப்பிட்டுவர உணவுக் குழாய் பிரச்னைகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்