தினமும் மாதுளம்பழச்சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்...?

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (17:25 IST)
மாதுளையில், உள்ள பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. மாதுளம் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து, நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் இ, வைட்டமின் கே, ரிபோபிளவின், கால்சியம், ஜின்க் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.


ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

மாதுளம் பழத்தில் அதிக அளவில் இரும்பு சாது நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் இரத்த உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.

மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. உடல் வயதாவதை கட்டுப்படுத்தவும், புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

மேலும் படிக்க:அற்புத மருத்துவகுணங்களை கொண்ட மாதுளம் பூ !!

மாதுளை தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

தினமும் மாதுளம் பழத்தினை உட்கொண்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, விந்தணுக்கள் குறைபாடு மற்றும் உடல் கோளாறு ஆகியவை நீங்கி இல்லற வாழ்வில் சிறக்க உதவும். மேலும் தினமும் மாதுளம் பழத்தினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மாதுளம் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தினை குறைப்பதில் பொட்டாசியம் மிக மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்