பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சாப்பிடுவதால் வைட்டமின்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இது சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், ஆற்றலைத் தக்கவைக்க உதவும்.
கொய்யா பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு கொய்யா பழத்தைக் கொடுத்தால் அவர்களது எலும்பு வலிமையாக இருக்கும். சொரி, சிரங்கு, இரத்த சோகை இருந்தால் கொய்யா பழத்தை சாப்பிட்டு வரும்போது சீக்கிரத்தில் குணமாகும்.
பப்பாளி பழத்தில் விட்டமின் சி, பீட்டாக்கரோட்டீன், நார்ச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளது. இந்த பப்பாளி பழத்தை முக்கியமாக குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களது உடல் மற்றும எலும்பு நன்றாக வளரும். நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் பப்பாளி பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்
சப்போட்டா பழத்தில் மாவுச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியன அதிக அளவில் உள்ளது. எனவே, இது நமது உடல் இரத்த ஓட்டத்திற்கு மிக மிக நல்லது. ஆனால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்தப் பழத்தை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.