பருப்புக்கீரையில் உள்ள வைட்டமின்களும் மருத்துவ பயன்களும்...!!

Webdunia
பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து  காக்கக்கூடியவை.
 

எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது. அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும்.
 
வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற கீரை இது. பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.
 
பித்தம் அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்றது. கல்லீரல் நோய்கள் தீரும். ஒமேகா 3 உள்ள அற்புதக் கீரை பருப்புக் கீரை. கால்சியம்  சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும்.
 
மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்குகிறது.
 
தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டல் தலைவலி போகும். பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகலாம்.
 
வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்ளங்களுக்கும் இக்கீரையை அரைத்து தடவலாம். உடலில் உள்ள கொழுப்பு கரையும். இக்கீரையின்  விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல், சிறுநீர்  எரிச்சல் போகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்