வெண்ணெய், உணவில் முக்கியமான ஒரு பொருளாக இருப்பினும், அதனை அதிகப்படியான அளவில் தினமும் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
வெண்ணெயின் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கான முக்கியக் காரணங்களில், தற்போதைய சமையல் முறைகளில் வெண்ணெய் அதிகம் சேர்ப்பது, மற்றும் மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளன என்பதும் அடங்கும்.
நம்முடைய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் வெண்ணெய் ஒருவகையாக ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால், சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை வெண்ணெய்களில், சல்பர், விலங்கு கொழுப்பு மற்றும் மாக்ரைன் போன்ற ரசாயனக் கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.