பாதங்களில் ஏற்படும் பாதவெடிப்பு சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!

Webdunia
தேன் பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
 

இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
 
இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
 
சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.
 
ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
 
வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்