நோய்கள் நீங்க அற்புத மருந்தாகும் துத்தி கீரை !!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (09:34 IST)
கீரை வகையைச் சேர்ந்த இந்த துத்தியில் கருந்துத்தி, சிறுதுத்தி, நிலத்துத்தி, இலைகள் துத்தி என பலவகை உண்டு. இருப்பினும் இதில் எது வேண்டுமென்றாலும் சமயத்திற்குத் தக்கபடி பயன்படுத்தலாம்.

துத்திக் கீரை மூல நோயாளிகளுக்குக் கைகண்ட மருந்தாகப் பயன்பட்டு நிவாரணம் அளிக்கிறது. துத்தி இலையை அம்மியில் மை போல அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தினசரி ஒரு மாதம் விடாமல் குடித்து வந்தால் மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 
துத்தி இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூசி அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகுவிரைவில் முறிந்த கலும்பு ஒன்று கூடி குணமாகும்.
 
வாயுவினால் ஏற்படும் சகல வியாதிகளுக்கும், இடுப்பு வலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ, பொரியலாகவோ செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும்.
 
துத்தி இலையை மட்பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொறுக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். இதுபோன்று தினசரி இரவு படுக்கைக்குப் போகும் முன் செய்து வந்தால் மூல வீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ஆகியவை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்