ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ள சூரிய காந்தி விதைகள் !!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (14:10 IST)
உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.


இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது.

குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
சூரிய காந்தி செடியின் விதைகளில் உள்ள வைட்டமின் ஈ செலீனியம் முதலான ஆன்டிஆக்ஸிடன்ட் சாதாரண காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.

சூரிய காந்தி விதையில் உள்ள நார்சத்து, உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள லினோலெனிக், ஓலிக் ஆகிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.

பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, எள், பூசணி மற்றும் ஆளி விதைகளுடன் சூரிய காந்தி விதையையும் கலந்து ஒரு நாளைக்கு 30 கிராம் சாப்பிடலாம். முடிந்தவரை, உப்பு சேர்க்காமல் வறுப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்