இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
வெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது. இருதயத்தை வலுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது.
வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர, வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.
தலைவலி சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.
மஞ்சள்காமாலை நோய் கண்டவர்கள் நெல்லிக்காய்களை அரிந்து சாறு பிழிந்து இத்துடன் தேனையும் சிறிதளவு கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் பறந்துவிடும்.