நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் சில இயற்கை மருத்துவ டிப்ஸ் !!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (14:19 IST)
ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது. கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும்.
 
தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.
 
கீழாநெல்லி சமூலம், கடுக்காய் தோல், வேப்பம் பிசின் பசும்பால் விட்டு அரைத்து நல்லெண்ணெய்வீ கூட்டி அடுப்பில் வைத்து சூடாக்கி இறக்கி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பைத்தியம் குணமாகும்.
 
துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும். கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.
 
மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும். முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.
 
10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.
 
செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும். தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும்.
 
வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்