பற்களை பராமரிக்க உதவும் சில மருத்துவ குறிப்புகள்...!!

Webdunia
இலவங்கப்பட்டையின் பொடியை சிறதளவு எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.

பால் பொருட்களில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. கால்சியம் உங்களது ஈறுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை  நீக்க கூடியது. மேலும் இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. தினமும் பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை  உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஆயில் புல்லிங் செய்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. இந்த ஆயில் புல்லிங் செய்யும் போது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிகின்றன.  உங்களது ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை போக்க இது உதவுகிறது.
 
கேரட்டை நீங்கள் பச்சையாக சாப்பிடுவது உங்களது வாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வாக அமையும். கேரட்டை பச்சையாக  சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைகின்றன. 
 
கேரட் உங்கள் வாய்துர்நாற்றம், பற்களில் சொத்தை விழுதல், பற்களில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும் கேரடை மென்று  சாப்பிடுவதால் உங்களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
 
அன்னாசி பழமும் கூட பற்கள் பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் உங்களது பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். உணவுக்கு முன் இது போன்று பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் உங்களது பற்களின் ஆரோக்கியம் நீடிக்கும். மேலும்  நீங்கள் தக்காளி பழத்தையும் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்