எளிதில் கிடைக்கும் வெற்றிலையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (17:12 IST)
வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச் சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து  பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு.  வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை,  கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை  தரக்கூடியவை.
 
கொடி வகையை சேர்ந்த இது, வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை  நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை  குணப்படுத்துகிறது.
 
வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
 
வாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம்,  பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல்  இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்