வயிறு உபாதை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஓமம் !!

Webdunia
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெய்யை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்.

பல்வலி இருந்தால், இந்த எண்ணெய்யைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல்வலி மறையும். வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெய்யை வயிற்றின் மீது தடவலாம்.
 
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய்  உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.
 
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி  கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
 
ஓமம், சுக்கு, கடுக்காய்த் தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, அரை தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன்  கலந்து குடிக்க வாயு உபாதை குணமாகும்.
 
ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
 
ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும். ஓமம், மிளகு, வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50  கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்