கல்யாண முருங்கையில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (10:08 IST)
கல்யாண முருங்கையில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் உள்ளது. கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும்.


கல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை குடித்தால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், பருத்த உடல் இளைக்கும்.

கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.

கல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும், மேலும் உடலை வலுவாக்கும். கல்யாண முருங்கை இலைகளை இலேசாக வதக்கி, இளஞ்சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் கீல்வாயு குணமாகும்.

கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

கல்யாண முருங்கை இலையுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை நோய்கள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்